TNPSC Thervupettagam

கீழடி அகழாய்வு

September 23 , 2021 1066 days 1077 0
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில், தந்தத்தால் செய்யப்பட்ட பகடை கண்டெடுக்கப் பட்டு உள்ளது.
  • இந்த பகடை 4 கிராம் எடையும், 1 புள்ளி 5 செ.மீ கன சதுரமும் கொண்டு ஆறு பக்கங்களிலும் 6 புள்ளிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.
  • ஏற்கனவே நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்வின்போது தந்தத்தில் ஆன சீப்பு கிடைத்தது.
  • பின்னர்,  6ம் நூற்றாண்டை சேர்ந்த வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கீழடி அருகே அகரம் பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில்  தங்கக் கம்மல்  கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • 13 எழுத்துக்கள்(தமிழி) அடங்கிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
  • பானையில் முட்கள் கொண்டு எழுதியிருக்கலாம்.
  • இதற்கு முன்பு ஆதன், உதிரன் என்ற பெயர் கொண்ட ஓடுகள் கிடைத்தன.
  • அதிகபட்சமாக வரிவடிவ எழுத்துகள் 7 அடங்கிய பானை ஓடு கிடைத்த நிலையில் 13 எழுத்துக்கள் கொண்ட இந்த ஓட்டால் கல்வியறிவு மிக்க மக்கள் இங்கு வாழ்ந்ததற்குச் சான்றாகக் கருதப்படுகிறது.
  • மேலும் கீழடியில் சிவப்பு நிற தானிய கொள்கலன் கண்டெடுக்கப் பட்டு உள்ளது
  • இந்த பானை கிடைத்த குழியில் மேலும் ஐந்து பானைகள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்