TNPSC Thervupettagam

கீழடி அருங்காட்சியகம்

March 9 , 2023 500 days 366 0
  • சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தில் அமைக்கப் பட்டு, மேலும் செட்டிநாடு கட்டிடக் கலை வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
  • இந்த அருங்காட்சியகத்தில் கீழடி அகழ்வாராய்ச்சித் தளங்களில் 2018 ஆம் ஆண்டு முதல் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்கள் உள்ளன.
  • கீழடிப் பகுதியில் வைகை நதிக் கரையில் செழித்துக் காணப்பட்ட பண்டைய நாகரிகம் அமைந்திருந்தது.
  • இங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்கள் கீழடி மற்றும் மதுரை, வேளாண் மற்றும் நீர் மேலாண்மை, பீங்கான் பொருள் தயாரிப்புத் தொழில், நெசவு மற்றும் இரும்புத் தொழில், கடல் வாணிபம் மற்றும் வாழ்க்கை முறை என வகைப் படுத்தப் பட்டுள்ளன.
  • கீழடியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வாராய்ச்சியானது சங்கக் காலத்தினை முன்பு கணிக்கப் பட்ட கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு என்ற காலத்திலிருந்து கிமு 6 ஆம் நூற்றாண்டு என்ற காலத்திற்குக் கணித்துள்ளது.
  • ஒரு பண்டையத் தமிழ் எழுத்து முறையான தமிழி என்ற எழுத்துக்களுடன் கூடிய 1000 முத்திரைகளும் 60 பானைகளும் கண்டெடுக்கப் பட்டன.
  • 2013-14 ஆம் ஆண்டில் வைகைப் பள்ளத்தாக்குப் பகுதியின் ஊடாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 293 இடங்களில் இந்தியத் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியினை மேற்கொண்டது.
  • இந்த அகழ்வாராய்ச்சியானது கீழடியின் பள்ளிச் சந்தைத் திடலில் மேற்கொள்ளப் பட்டது.
  • 2018 ஆம் ஆண்டில் மாநிலத் தொல்லியல் துறையானது நான்காவது பருவத்திலிருந்து இந்த அகழ்வாராய்ச்சியினை மேற்கொண்டது.
  • இதில் ஆறாவது பருவத்திலிருந்து கீழடியுடன் கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகியவை தொகுப்புகளாக சேர்க்கப் பட்டன.
  • இதில் கொந்தகை எனபது ஒரு மிகப்பெரிய புதைவிடமாக உள்ள நிலையில், அகரம் மற்றும் மணலூர் ஆகியவை ஒரு துடிப்பான மனித வாழ்விடங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்