September 15 , 2021
1321 days
598
- கீழடியிலிருந்து முத்திரை பொறிக்கப்பட்ட சில வெள்ளி நாணயங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
- இந்த நாணயங்களில் சூரியன், நிலவு, எருது போன்ற ஒரு விலங்கு மற்றும் வடிவியல் வடிவங்கள் போன்றவை பொறிக்கப்பட்டிருந்தன.
- இந்த நாணயங்கள் கி.மு. 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என இது பற்றிய ஆய்வுகளில் தெரிய வருகிறது.
- இது பண்டைய மௌரியப் பேரரசிற்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகும்.
- கீழடி அகழாய்வுகள், தமிழகத்தில் கி.மு. 600 ஆண்டுகளில் விரிவான கல்வியறிவு பரவியிருந்ததைக் காட்டுகின்றன.
- எனவே, 2600 ஆண்டுகளுக்கு முன்பு கூட தமிழகத்தின் பொது மக்களிடம் படிப்பறிவு இருந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

Post Views:
598