பண்டைய தொல்லியல் தளமான கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 6வது கட்ட அகழாய்வின் போது கருங்கல்லால் உருவாக்கப்பட்ட 4 கிலோ எடையுள்ள கற்கள் கண்டெடுக்கப் பட்டன.
இது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதியின் ஆற்றங் கரையில் அமைந்துள்ளது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட கோள வடிவப் பொருட்கள் தட்டையான அடிப்பாகம் மற்றும் பளபளப்பான மேற்பரப்புடன் கறுப்பு நிறத்தில் உள்ளன.
இங்கு மரக்கரியானது பொதுவாக அனைத்திலும் காணப்படுகின்றது.
இங்கு ஒரு உலையானது 0.61 மீட்டர் ஆழத்தில் காணப்பட்டுள்ளது. இது தீ பயன்படுத்தப் பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துகின்றது.
இந்த அனைத்துக் கண்டுபிடிப்புகளும் தொழிற்துறை தளமான கீழடியில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதற்கான சாத்தியக் கூறைக் குறிக்கின்றது.
இந்தக் கண்டுபிடிப்புகள் இந்தத் தளத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி. 1 ஆம் நூற்றாண்டு ஆகியவற்றிற்கிடையே வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்றதற்கான சாத்தியக் கூறைக் குறிக்கின்றன.
முன்னதாக ஜுன் மாதத்தில், ஒரு குழந்தையின் எலும்பு மீதிகள் கொந்தகையில் கண்டெடுக்கப் பட்டன.
6 ஆம் கட்ட அகழாய்வானது சிவகங்கை மாவட்டத்தின் கீழடி, கொந்தகை, மணலூர் மற்றும் அகரம் ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.