கீழவெண்மணி சம்பவம் 50-வது ஆண்டு
December 26 , 2018
2162 days
760
- 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதியானது கீழவெண்மணி சம்பவத்தின் 50-வது ஆண்டைக் குறிக்கிறது.
- தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழவெண்மணி என்ற கிராமம் உள்ளது.
- 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று இந்த கிராமத்தில் 44 தலித் இன மக்கள் ஒரு குடிசையில் பூட்டி வைக்கப்பட்டு, பின்னர் அக்குடிசைக்குத் தீ வைக்கப்பட்டது.
- கீழவெண்மணி சம்பவம் என்பது சுதந்திர இந்தியாவில் தலித் இன மக்கள் மீது நடத்தப்பட்ட முதலாவது படுகொலையாகும்.
- இது கௌரவமான அடிப்படை ஊதியத்தை பெறுவதற்காக தங்களது குரலை உயர்த்திய நிலமற்ற சமூகம் ஒடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.
- ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கீழ் தலித் இன மக்கள் தங்களது குரலை உயர்த்தினர்.
Post Views:
760