சிங்கப்பூரில் நடைபெற்ற உலக சதுரங்கச் சாம்பியன்ஷிப் (வாகையர்) போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த D.குகேஷ் (சென்னை), நடப்புச் சாம்பியனானச் சீனாவினைச் சேர்ந்த டிங் லிரனைத் தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் இவர் தனது 18வது வயதில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
குகேஷுக்கு முன்னதாக, ரஷ்ய ஜாம்பவான் கேரி காஸ்பரோவ் 1985 ஆம் ஆண்டில் தனது 22 வயதில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையினைப் பெற்றிருந்தார்.
2007 ஆம் ஆண்டில் இந்தப் பட்டத்தினை வென்று, நான்கு முறை அந்தப் பட்டத்தினை வென்று 2013 ஆம் ஆண்டு வரை அந்தப் பட்டத்தினை வென்றவர் என்ற பெருமைக்கு உரியவராக இருந்த இந்தியாவைச் சேர்ந்த முதல் கிராண்ட் மாஸ்டர் மற்றும் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார்.