TNPSC Thervupettagam

குக்கிலாந்திற்கான கோரிக்கை

May 21 , 2023 426 days 264 0
  • குக்கி-ஜோமி பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, குக்கி-ஜோமி இடத்தினைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மணிப்பூரில் தனி நிர்வாகம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
  • தனி நிர்வாக "குக்கிலாந்து" கோரிக்கையானது 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இருந்தே முன்வைக்கப்பட்டு வருகிறது.
  • அந்தக் காலகட்டத்தில் தான், குக்கி-ஜோமி கிளர்ச்சிக் குழுக்களில் முதலாவது மற்றும் பெரிய குழுவான, குக்கி தேசிய அமைப்பு (KNO) உருவானது.
  • 1993 ஆம் ஆண்டு நாகா-குக்கி மோதல்களுக்குப் பிறகு தனி “குக்கிலாந்து” கோரிக்கை வலுத்தது.
  • 2012 ஆம் ஆண்டில், குக்கி மாநிலக் கோரிக்கைக் குழு (KSDC) என்ற குழு குக்கிலாந்து இயக்கத்தினை அறிவித்தது.
  • மணிப்பூரின் 22,000 சதுர கி.மீ. பரப்பளவில் 60%க்கும் அதிகமான 12,958 சதுர கி.மீ. பரப்பினை "குக்கி இனத்தவருக்கான குக்கிலாந்து" என குக்கி மாநிலக் கோரிக்கைக் குழு உரிமை கோரியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்