TNPSC Thervupettagam

குசும் திட்டம்

February 7 , 2018 2355 days 1633 0
  • சோலார் மின் உற்பத்தியை (Solar Farming) மேற்கொள்வதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தான் மஹாபியான் (Kisan Urja Suraksha evam Utthaan Mahaabhiyan-KUSUM) என்ற திட்டத்தை துவங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • பரவலாக்கப்பட்ட சோலார் மின் உற்பத்தி மூலம் ஐந்தாண்டுகளில் 28250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
  • நாடு முழுவதும் விவசாயிகளுடைய தரிசு நிலத்தில் 10000 மெகாவாட் சோலார் மின்உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவதும், வேளாண்மைக்கான பயன்பாட்டிற்காக 17.5 லட்சம் சோலார் பம்புகளை வழங்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்
  • விவசாயிகளுடைய தரிசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் கட்டமைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கூடுதல் மின்சாரத்தை, விவசாயிகள் அரசின் மின் வழங்கல் கட்டமைப்பிற்கு (Power Grid) விற்பனை செய்ய வாய்ப்பினை வழங்கி, அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளுக்காக 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்து கொள்ளப்படும். 30 சதவீத தொகையானது வங்கிக் கடன் மூலமாக தரப்படும். மீதியுள்ள 10 சதவீதத்தை விவசாயிகள் அளிக்க வேண்டும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்