குஜராத் மாநிலமானது 1960 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
அதே நாளில், மராத்தி மொழி பேசும் மக்களின் ஒரு கோரிக்கையை நிவர்த்தி செய்யும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
பம்பாய் மாநிலத்தில் இரண்டு மொழிவாரிக் குழுக்கள் தங்களுக்கென்று தனித்தனி மாநிலங்களைக் கோரி வந்த நிலையில் இந்த இரண்டு மாநிலங்களும் பம்பாய் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டன.
இந்த மொழிவாரிக் குழுக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, 1960 ஆம் ஆண்டு பம்பாய் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் இந்த மாநிலங்கள் உருவாக்கப் பட்டன.