அகமதாபாத்தில் நடைபெற்ற இரண்டு நாட்கள் அளவிலான 2023 ஆம் ஆண்டு உலகளாவிய இந்திய மீன்பிடி மாநாட்டின் போது கோல் மீன் இனமானது (கருந்திட்டு கத்தாளை மீன்) குஜராத்தின் மாநில மீனாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய மீன்களில் கோல் மீன் ஒன்றாகும்.
தங்க பழுப்பு நிறத்திலான இந்த மீன் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடல் பகுதிகளில் காணப் படுகிறது.
இந்த மீன் மிகவும் மதிப்புமிக்கது என்பதோடு அதன் இறைச்சி மற்றும் காற்று சுவாசப் பை ஆகியவற்றிற்காக அதற்கான தேவை அதிகமாக உள்ளது.
கோல் மீன் பியர் மற்றும் ஒயின் தயாரிக்கவும், அதன் சுவாசப் பை என்பது மருந்து உற்பத்தியிலும் பயன்படுத்தப் படுகிறது.