TNPSC Thervupettagam

குஜராத்தின் முதல் கடலோரப் பறவைகள் கணக்கெடுப்பு

January 7 , 2025 15 days 132 0
  • குஜராத் மாநில அரசு ஆனது, ஜாம்நகரில் உள்ள கடல் சார் தேசியப் பூங்கா மற்றும் சரணாலயத்தில் நாட்டின் முதல் கடலோர மற்றும் கடல் பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டது.
  • குஜராத்தில் உள்ள கடல் சார் தேசியப் பூங்கா மற்றும் கடல் சார் சரணாலயம் ஆனது இந்தியாவின் முதல் பிரத்தியேக கடல் சார் தேசியப் பூங்கா ஆகும்.
  • இது தேவபூமி துவாரகா, ஜாம்நகர் மற்றும் மோர்பி மாவட்டங்களில் பரவியுள்ளது என்ற நிலையில் இது சுமார் 170 கிலோ மீட்டர் நீளக் கடற்கரை மற்றும் ஓகா மற்றும் நவ்லாகி இடையே உள்ள 42 தீவுகளை உள்ளடக்கியது.
  • கட்ச் வளைகுடாவில் உள்ள இப் பாதுகாக்கப்பட்ட பகுதியானது கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சதுப்புநில சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப் பட்டது.
  • ஜாம்நகர் மாவட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கரையோர வாழ் பறவைகள் உட்பட 300 வகையான உள்நாட்டு மற்றும் வலசை போகும் பறவை இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்