TNPSC Thervupettagam

குடிநீரில் யுரேனியம் இருப்பு

July 29 , 2024 117 days 207 0
  • கதிரியக்கப் பொருளான யுரேனியத்தின் செறிவு, குடிநீரில் லிட்டருக்கு 60 மைக்ரோ கிராம்கள் (லிட்டருக்கு ஒரு கிராமின் மில்லியனில் ஒரு பங்கு அல்லது µg/l) வரை இருப்பது முற்றிலும் பாதுகாப்பானது.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியத் தரநிலைகள் வாரியம் ஆனது (BIS) உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின் படி, 30 µg/l என்ற புதிய வரம்பை அறிவித்தது.
  • கணிசமான அளவு யுரேனியம் நுகர்வு கொண்ட பின்லாந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரண்டு நாடுகள் முறையே 100 மற்றும் 350 µg/l என்ற அளவில் பாதுகாப்பான வரம்புகளை நிர்ணயித்துள்ளன.
  • மற்றொரு யுரேனியம் கலப்பு அதிகம் பதிவாகியுள்ள நாடான தென்னாப்பிரிக்கா, 70 µg/l என்ற வரம்பைக் கொண்டுள்ளது.
  • கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மிகப்பெரிய அளவில் யுரேனிய இருப்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் இதன் வரம்புகள் முறையே 20 மற்றும் 15 µg/l ஆக உள்ளது.
  • யுரேனிய இருப்பு இல்லாத ஜெர்மனி மேலும் குறைவான வரம்புகளைக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்