TNPSC Thervupettagam

குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு - அஸ்ஸாம்

January 4 , 2018 2388 days 832 0
  • அஸ்ஸாம் மாநிலத்திற்கென ஆவணப்படுத்தப்பட்ட குடிமக்களுக்கான தேசியப் பதிவேட்டின் (National Register of Citizens) முதல் வரைவை அஸ்ஸாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • குடிமக்களுக்கான அங்கீகரிப்புக்கு விண்ணப்பித்த 32.9 மில்லியன் மக்களில் 19 மில்லியன் மக்கள் மட்டுமே சட்டப்பூர்வ இந்திய மக்கள் என இந்த வரைவில் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • மாநிலத்திற்கென தனிப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டை தயாரித்து வெளியிட்ட முதல் மாநிலம் அஸ்ஸாம் ஆகும்.
  • இதை 1951 –ல் அஸ்ஸாம் மேற்கொண்டது.
  • மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்பதிவேட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை (updated) வெளியிடும் ஒரே மாநிலமும் அஸ்ஸாமே ஆகும்.
  • வெளிநாட்டவரிலிருந்து, உண்மைப்பூர்வ தோற்றச் சான்றுடைய (Credential of Bona Fide) இந்திய அஸ்ஸாம்வாழ் குடிமக்களை வேறுபடுத்தி அடையாளம் காண இப்பதிவேடு முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டது.
  • பின் 1974 ஆம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்குப் பிறகு சட்ட விரோதமாக அஸ்ஸாமில் உட்புகுந்த புலம்பெயர் குடியேறிகளை (Migrants) அடையாளம் காண்பதற்காகவும் இப்பதிவேடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
  • இந்த வரையறுப்பு தினமானது (Cut-off) 1985-ஆம் ஆண்டில் “அஸ்ஸாம் ஒப்பந்தத்தில்” (Assam Accord) ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 1951 இன் NRC ன் பதிப்பை மேம்படுத்துவதற்கான பணிப் பொறுப்பை அஸ்ஸாம் அரசு ஏற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடே அஸ்ஸாம் ஒப்பந்தமாகும்.
  • அஸ்ஸாமிலிருந்து சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டுமென அனைத்து அஸ்ஸாமிய மாணவர்கள் யூனியனால் 1979-ல் நடத்தப்பட்ட 6 ஆண்டு கால போராட்டத்தைத் தொடர்ந்து 1985-ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில், 1951 ஆம் ஆண்டின் NRC பதிப்பை மேம்படுத்துவதற்கான பொறுப்பை அஸ்ஸாம் அரசு ஏற்றுக் கொள்ளும் விதமாக “அஸ்ஸாம் ஒப்பந்தம்” ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்