நாட்டில் ஹார்ன்பில் எனும் பறவையை காப்பாற்றுவதற்காகவும் பொதுமக்களிடையே இந்த தனித்துவம் வாய்ந்த பறவையை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் குடிமக்கள் அறிவியல் தளம் என்ற முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தளமானது இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தைச் (Nature Conservation Foundation) சேர்ந்த அப்ரஜித் தத்தா, ரோகித் நனிவதேகர் மற்றும் ‘கன்சர்வேஷன் இந்தியா’ என்ற அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த ராம்கி ஸ்ரீனிவாசன், விக்ரம் ஹயர்சாவி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டில் ஹார்ன்பில் எனும் பறவையின் வாழ்விடம் குறித்த தகவல்களை அளிப்பதற்காக இந்த தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் அனைத்து இடங்களிலும் ஹார்ன்பில் பறவை பற்றிய தகவலை மக்கள் அளிப்பதற்காக ஒரு ஊடாடு இணைய இடைமுக இணையதளமான “ஹார்ன்பில் வாட்ச் முன்முயற்சி” (hornbills.in) என்ற தளம் உதவும்.
ஹார்ன்பில் என்ற பறவைகள் “காடுகளின் விவசாயி” என்று அழைக்கப்படுகின்றன. இப்பறவைகள் மரங்களிலிருக்கும் விதைகளை மற்ற இடங்களுக்கு பரவச் செய்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.