ஆண்டுதோறும் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியாவில் குடிமைப் பணிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி அன்று டெல்லியில் உள்ள மெட்கால்பே இல்லத்தில் (Metcalfe House), இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் முதல் இந்திய குடிமைப்பணி அதிகாரிகளின் முதல் பிரிவோடு (first batch of IAS officers) ஆற்றிய உரையை நினைவு கூர்வதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 21-ஆம் தேதி குடிமைப் பணிகள் தினம் (Civil Services Day) கொண்டாடப்படுகிறது.
சிவில் சர்விஸ் தினத்தை முன்னிட்டு மத்தியப் பணியாளர், பொதுமக்கள் குறைபாடுகள் ஓய்வூதியத் துறை அமைச்சகமானது (Ministry of Personnel, Public Grievances and Pensions) புதுதில்லியில் ஏப்ரல் 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் இரு நாள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வின் போது துணைக் குடியரசுத் தலைவர் “Emulating Excellence — Takeaways for Replication” எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் காணப்பட்ட முன்னுரிமை திட்டங்கள் மற்றும் புத்தாக்கங்களின் திறம்பட்ட செயல்பாட்டிற்காக பொது நிர்வாகத்தின் சிறப்புத்துவத்திற்கான விருதினை (Awards for Excellence in Public Administration) மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள், மாவட்ட நிர்வாகங்களுக்கு பிரதமர் வழங்கினார்.
2018 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்விஸ் தினத்தன்று பொது நிர்வாகத்தின் சிறப்புத்துவத்திற்கான விருதுகள் வழங்கப்படுவதற்காக பின்வரும் நான்கு முன்னுரிமை திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana)
டிஜிட்டல் கட்டண செலுத்துதல்களை மேம்படுத்துவதற்கான திட்டம் (scheme for the Promotion of Digital Payments)
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா -நகர்ப்புறம் மற்றும் ஊரகம் (Pradhan MantriAwas Yojana – Urban & Rural)