TNPSC Thervupettagam
January 29 , 2020 1642 days 760 0
  • இந்தியா தனது 71வது குடியரசு தினத்தை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அன்று கொண்டாடியது.
  • இந்தியாவின் 71வது குடியரசு தின அணிவகுப்பில் பிரேசில் அதிபரான ஜெய்ர் போல்சனரோ தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.
    • இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பிற்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்ட மூன்றாவது பிரேசில் அதிபர் போல்சனரோ ஆவார்.
  • இந்த ஆண்டு, முதன்முறையாக, இந்திய நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்பட்ட தேசியப் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் விழா நடைபெற்றது.
  • இந்த விழாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமைப் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படையைச் சேர்ந்த தலைமைத் தளபதிகள் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
  • அணிவகுப்பில் கலந்து கொண்ட துணை இராணுவப் படையினரிடையே மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையானது முதல் பரிசைப் பெற்றுள்ளது. முப்படைகளின் அணிவகுப்பில் இந்திய விமானப் படையின் (Indian Air Force - IAF) அணிவகுப்பு குழு முதல் பரிசைப் பெற்றுள்ளது.
  • இந்த விழாவின் போது நான்காவது தலைமுறை இராணுவ அதிகாரியான கேப்டன் தன்யா ஷெர்கில் என்பவர் இந்திய இராணுவத் தகவல் தொடர்புப் படைப் பிரிவின் அனைத்து ஆண்கள் படையை வழிநடத்தினார்.
    • இந்தப் படைப் பிரிவின் குறிக்கோள் “டீவ்ரா சௌகாஸ்” என்பதாகும்.
  • 71வது குடியரசு தின அணிவகுப்பின் ஒரு பகுதியாக மத்திய ரிசர்வ் காவல் படையின் (Central Reserve Police Force - CRPF) அனைத்து பெண்கள் இரு சக்கர வாகனக் குழுவானது தனது முதலாவது அணிவகுப்பை மேற்கொண்டது.
  • 71வது குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய சிறப்பம்சம் தனுஷ் பீரங்கித் துப்பாக்கியை முதன்முறையாக காட்சிப்படுத்தியதாகும்.
    • “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முதன்மைத் திட்டத்தின் கீழ் தனுஷ் பீரங்கித் துப்பாக்கிகள் தளவாடத் தொழிற்சாலை வாரியத்தால் தயாரிக்கப்படுகின்றன.

குடியரசு தினத்தில் பங்கேற்றவர்களின் பட்டியல் / அட்டவணை

  • 2020 ஆம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் மொத்தம் 22 காட்சிப்பட அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த 16 காட்சிப் படங்களும் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 6 காட்சிப் படங்களும் அடங்கும்.

மாநிலம்

காட்சிப் படம்

குஜராத்

ராணி கி வாவ் – ஜல் மந்திர்

மேகாலயா

வேர்ப் பாலம்

பஞ்சாப்

குரு நானக் தேவின் 550வது பிறந்த நாள்

தமிழ்நாடு

கிராமப்புற மற்றும் பண்டையக் கலாச்சாரப் பாரம்பரியம்- அய்யனாரின் சிலை

ராஜஸ்தான்

ஜாலி ஜரோஹா

ஜம்மு காஷ்மீர்

கிராமத்தை நோக்கி - காஷ்மீர் பண்டிதர்களை மறுவாழ்வு செய்தல்

தேசியப் பேரிடர் மீட்புப் படை

பேரிடர் நிவாரணத் தொழில்நுட்பம்

மத்திய நிதி அமைச்சகம்

நிதியியல் உள்ளடக்கல்

  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்