TNPSC Thervupettagam

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு தேர்வு

August 7 , 2017 2537 days 945 0
  • நாட்டின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.
  • புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்யா நாயுடு வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
  • மொத்தம் பதிவான 771 வாக்குகளில், வெங்கய்யா நாயுடு 516 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குளை மட்டுமே பெற்றார்.
  • குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 790 வாக்குகள் இருந்தன. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 98 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவர் தொடர்ச்சியாக இருமுறை அப்பொறுப்பை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இதற்கு முன்பு, கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹமீது அன்சாரி 490 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகளையும் பெற்றது நினைவு கூரத்தக்கது.
  • கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிகமான வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் குடியரசுத் துணைத்தலைவர் என்கிற பெருமையும் வெங்கய்யா நாயுடுவுக்கு கிடைத்திருக்கிறது.
  • 1952, 1957 தேர்தல்களில் டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனும், 1979-இல் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது ஹிதயத்துல்லாவும், 1987 இல் சங்கர் தயாள் சர்மாவும் போட்டியின்றி துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.
  • அதேபோல இரண்டு முறை தொடர்ந்து குடியரசுத் துணைத்தலைவராக பதவி வகித்த பெருமை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனுக்கும்( 1952-57, 1957-62) , ஹமீது அன்சாரிக்கும் (2007-12, 2012-17) மட்டுமே உண்டு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்