TNPSC Thervupettagam

குடியரசு துணைத்தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்பு

August 12 , 2017 2716 days 1002 0
  • நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு (68) 10.08.2017 அன்று பதவியேற்றுக் கொண்டார்.
  • தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் குடியரசு துணைத்தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில், வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • வெங்கய்ய நாயுடு, இந்தியாவின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவர் ஆவார். அந்தப் பதவியை வகிக்கும் 13-ஆவது நபர் எனும் பெருமையையும் அவர் பெறுகிறார். மேலும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த ஒருவர் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்பது இதுவே முதல்முறையாகும்.
  • நாட்டின் குடியரசு துணைத் தலைவர் என்ற முறையில், மாநிலங்களவைக்கும் வெங்கையா நாயுடு தலைவராகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்