TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவர் ஆட்சி – மகாராஷ்டிரா

November 13 , 2019 1714 days 661 0
  • மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், எந்தவொரு பெரிய கட்சியும் அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளும் அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறவில்லை.

  • எனவே, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அம்மாநில சட்டமன்றத்தில் இருக்கும் மிகப்பெரிய கட்சியை ஒரு பெரும்பான்மை கொண்ட அரசை உருவாக்க அழைப்பு விடுத்தார்.
  • இந்த விருப்பத் தேர்வு தோல்வியுற்றதால், அரசாங்கத்தை அமைப்பதற்காக அம்மாநிலத்தில் உள்ள இரண்டாவது பெரிய மற்றும் மூன்றாவது பெரிய கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
  • அதன் பின்னர் அரசியலமைப்பின் 356 (1)வது சரத்தின் கீழ் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு அம்மாநில ஆளுநர் அறிக்கை ஒன்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
  • பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவையானது அம்மாநில ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்தது. மகாராஷ்டிரா தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளது.
  • அம்மாநில சட்டமன்றமானது தற்காலிக இடைநீக்க நிலையில் வைக்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்