ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் 12 தேதி வரையிலான காலத்திற்கு சுவாஜிலாந்து, ஜாம்பியா, நிலநடுக்கோட்டில் அமைந்துள்ள கினியா (Equatorial Guinea) ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறைப் பயணத்தை இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மேற்கொண்டுள்ளார்.
நிலநடுக்கோட்டு கினியா மற்றும் சுவாஜிலாந்து ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
29 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்பியாவிற்கு இந்திய குடியரசுத் தலைவருடைய பயணம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஆப்பிரிக்க கண்டத்திற்கான மூன்றாவது பயணமாகும்.
2017 ஆம் ஆண்டு டிஜிபோட்டி நாட்டிற்கு முதல் அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார். அதன் பின் நடப்பாண்டின் மார்ச் மாதம் மொரிசியஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய இரு நாடுகளுக்கு இரண்டாவது அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார்.