TNPSC Thervupettagam

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை

May 25 , 2024 54 days 140 0
  • 2019 ஆம் ஆண்டு குடியுரிமை (திருத்தம்) சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 300க்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • டெல்லியில் சான்றிதழ் பெற்ற 14 பேர் 2013 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
  • இந்தியாவிற்குள் சட்டப்பூர்வமாக நுழைந்த பெரும்பாலான பாகிஸ்தானிய இந்துக்கள் குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டெல்லியில் வசிக்கின்றனர்.
  • மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாதுவாக்கள் மற்றும் நமசுத்ராக்கள் மற்றும் அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இருந்து விலக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியவில்லை.
  • குடியுரிமை இணைய தளமானது, விண்ணப்பதாரர்கள் பிறந்த நாடு குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் வங்காளதேசம், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் தங்கள் தோற்றுருவினைக் கண்டறியும் ஒரு ஆவணத்தையாவது சமர்ப்பிக்க வேண்டும் என கோருகிறது.
  • மேற்கு வங்காளத்தில் உள்ள பயனாளிகள் எந்த ஆவணமும் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்ததால், அவர்களால் இந்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.
  • மார்ச் 11 ஆம் தேதியன்று, 2024 ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்த விதிகளின் அமலாக்கத்தினை உள்துறை அமைச்சகம் அறிவித்தது என்ற நிலையில், இது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை செயல்படுத்த உதவியது.
  • இந்தச் சட்டமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்