TNPSC Thervupettagam

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025

April 9 , 2025 13 days 73 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, தற்போது அது ஒரு சட்டமாக மாறியுள்ளது.
  • இந்தச் சட்டம் ஆனது, இந்தியாவில் வெளிநாட்டினரின் குடியேற்றம், நுழைவு மற்றும் தங்குதலை ஒழுங்குப்படுத்துவதற்கு முயல்கிறது.
  • இது 1920 ஆம் ஆண்டு கடவுச் சீட்டு (இந்திய நாட்டிற்குள் நுழைதல்) சட்டம், வெளி நாட்டினர் பதிவுச் சட்டம், 1939, வெளிநாட்டினர் சட்டம், 1946 மற்றும் குடியேற்றச் சட்டம், 2000 (போக்குவரத்து அமைப்புகளின் பொறுப்பு) ஆகிய சட்டங்களை ரத்து செய்கிறது.
  • தற்போது, ​​தேசியப் பாதுகாப்பு, இறையாண்மை, பொது சுகாதாரம் அல்லது வெளி நாட்டு உறவுகளுக்கு மிக அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால் ஒரு வெளிநாட்டினருக்கு இந்தியாவிற்குள் நுழைவு மறுக்கப்படலாம்.
  • கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்கள் போன்ற நிறுவனங்கள் வெளிநாட்டினர் குறித்தத் தகவல்களைக் குடியேற்ற அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்