மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது, 2025 ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதாவினை அறிமுகப்படுத்த உள்ளது.
இது வெளிநாட்டினரின் குடியேற்றம் மற்றும் பெயர்வினைக் கையாளும் தற்போதைய நான்கு சட்டங்களையும் ரத்து செய்யும்.
முன்மொழியப்பட்ட இந்தச் சட்டம் ஆனது தற்போதுள்ள சட்டங்களுக்கு மாற்றாக முன் வைக்கப்படும்.
கடவுச் சீட்டு (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டம், 1920
வெளிநாட்டினரின் பதிவுச் சட்டம், 1939
வெளிநாட்டினர் சட்டம், 1946; மற்றும்
குடியேற்றம் (போக்குவரத்து நிறுவனங்களின் பொறுப்பு) சட்டம், 2000.
முன்மொழியப்பட்ட இந்தச் சட்டமானது, இந்தியாவிற்குள் வெளிநாட்டினரின் நுழைவு, வெளியேற்றம் மற்றும் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்த அல்லது ஒழுங்குபடுத்தச் செய்வதற்கு மத்திய அரசிற்கு அதிகாரத்தை வழங்குகிறது.
இந்தப் புதிய மசோதாவில் அங்கீகரிக்கப்படாத உள்நுழைவிற்கு என்று சுமார் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும், போலி கடவுச் சீட்டிற்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதில் வெளிநாட்டுக் குடிமக்களை சேர்க்கைக்கு அனுமதிக்கும் பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களின் பங்கு, கடவுச் சீட்டு மற்றும் நுழைவு இசைவுச் சீட்டுகள் தொடர்பான விவகாரங்களுடன் குறிப்பிடப் படும்.