ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு செய்முறையில் பங்கெடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், ஆண்களுக்கான இனவிருத்திறன் நீக்கம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை “வாசக்டமி பற்றிய இரு வார நிகழ்வு ” கடைப்பிடிக்கப்பட உள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை “வாசக்டமி பற்றிய இரு வார நிகழ்ச்சி” கடைப்பிடிக்கப்படும். இந்நாட்களில் அரசுப் பொது மருத்துவமனையில் ஆண்களுக்கான தரமான இனவிருத்தித்திறன் நீக்க சேவை (Vasectomy) அளிக்கப் பெறும்.
குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறையில் ஆண்களின் பங்கேற்பினை ஊக்குவிப்பதற்காக தேசிய பணியரங்குகள் மத்திய சுகாதாரத் துறையால் நடத்தப்படுகின்றன.
இந்தப் பணியரங்கத்தில் கருத்தடை சாதனங்களின் விநியோகத்தை எளிமைப்படுத்துவதற்காகவும், விநியோக சங்கிலி மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு பொருட்களின் மேலாண்மை தகவல் அமைப்பு (Family Planning Logistics Management information System – FMCMIS) வெளியிடப்பட உள்ளது.