TNPSC Thervupettagam

குடும்ப கட்டுப்பாட்டு கருத்தரங்கு

November 22 , 2017 2432 days 775 0
  • ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு செய்முறையில் பங்கெடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், ஆண்களுக்கான இனவிருத்திறன் நீக்கம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை “வாசக்டமி பற்றிய  இரு வார நிகழ்வு ” கடைப்பிடிக்கப்பட உள்ளது.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 4 வரை  “வாசக்டமி பற்றிய  இரு வார நிகழ்ச்சி” கடைப்பிடிக்கப்படும். இந்நாட்களில் அரசுப் பொது மருத்துவமனையில் ஆண்களுக்கான  தரமான  இனவிருத்தித்திறன் நீக்க சேவை (Vasectomy) அளிக்கப் பெறும்.
  • குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறையில் ஆண்களின் பங்கேற்பினை ஊக்குவிப்பதற்காக தேசிய பணியரங்குகள் மத்திய சுகாதாரத் துறையால் நடத்தப்படுகின்றன.
  • இந்தப் பணியரங்கத்தில் கருத்தடை சாதனங்களின் விநியோகத்தை எளிமைப்படுத்துவதற்காகவும், விநியோக சங்கிலி மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்ட குடும்ப கட்டுப்பாட்டு பொருட்களின் மேலாண்மை தகவல் அமைப்பு (Family Planning Logistics Management information System – FMCMIS) வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்