TNPSC Thervupettagam

குடும்பத்திற்கான பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் – ஜூன் 16

June 19 , 2018 2292 days 544 0
  • ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 16-ம் தேதி உலகம் முழுவதும் குடும்பத்திற்கான பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பூர்வீக நாட்டின் நீடித்த வளர்ச்சிக்காகவும், தங்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பங்களின் நலனுக்காகவும் மேற்கொள்ளும் நிதிப் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை அங்கீகாரம் செய்ய இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச விவசாயத் துறைக்கான நிதியமைப்பின் (International Fund for Agricultural Development-IFAD) செயற்குழுவின் 38-வது கூட்டத்தில் அனைத்து 176 உறுப்பினர் நாடுகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • பிற்பாடு இத்தினம் ஐக்கிய நாடுகள் பொது அவையால் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தீர்மானத்தின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடும்பத்திற்கான பணம் அனுப்புதலுக்கான முதல் சர்வதேச தினம் 2016-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்