TNPSC Thervupettagam

குட்டிக்கானம் அரண்மனை

August 10 , 2023 345 days 225 0
  • குட்டிக்கானம் என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமனுக்கும் தேக்கடிக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் ஆகும்.
  • இது கேரள மாநிலத் தொல்லியல் துறையின் ஒரு முயற்சியால் விரைவில் வரலாற்று நினைவுச் சின்னம் என்ற அந்தஸ்தினைப் பெறவுள்ளது.
  • இது அம்மாச்சி கொட்டாரம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இந்த அரண்மனையானது 1890 ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது.
  • 130 ஆண்டுகள் பழமையான இந்த அரண்மனையானது ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் கோடைகால வாசஸ்தலமாகத் திகழ்ந்தது.
  • இந்த அரண்மனையானது, 1885 ஆம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மூலம் திருநாள் ராம வர்மாவின் ஆட்சியின் போது கட்டமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்