யூட்யூப் ஊடகப் பிரபலமான சங்கர், குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இது 19(1)(a)வது சரத்தினை குறிப்பிட்டு, "ஒரு நலமான ஜனநாயகத்தின் ஆன்மாவானது பேச்சுச் சுதந்திரத்தில் தான் உள்ளது" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் மீது 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெண்களுக்கு துன்பம் விளைவித்தல் தடைச் சட்டத்தின் 4வது பிரிவு, 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 67வது பிரிவு ஆகியவற்றுடன் சேர்த்து இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) 509வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.