தென்னிந்தியா முழுவதும் காணப்படும் 'தென்கானா' என்ற குதிக்கும் சிலந்திகளின் ஒரு புதிய இனத்தை சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில் இது முன்னர் அறியப்பட்ட இரண்டு இனங்களை உள்ளடக்கியதாகும்.
கர்நாடகாவில் தென்கனா ஜெயமங்கலி என்ற புதிய இனத்தையும் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புதிய குழுவானது குதிக்கும் சிலந்திகளின் ப்ளெக்ஸிப்பினா என்ற ஒருதுணைப் பிரிவைச் சேர்ந்தது.
ஆனால் இது ஹைலஸ் மற்றும் டெலமோனியா போன்ற இதனுடன் தொடர்புடையக் குழுக்களில் இருந்து வேறுபட்டதாகும்.
முன்னதாக கொலோப்சஸ் பேரினத்தில் இடம் பெற்ற இரண்டு இனங்கள் தற்போது புதிய பேரினத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
அவை தென்கனா மனு (தென் இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படுகிறது) மற்றும் தென்கனா அர்காவதி (கர்நாடகாவில் காணப்படுகிறது) ஆகியனவாகும்.
முதன்முறையாக தென்கன ஜெயமங்கலி, கர்நாடகாவில் உள்ள ஜெயமங்கலி நதியின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.