இந்த வளாகத்தின் மறுசீரமைப்புத் திட்டம் 2013 ஆம் ஆண்டில் தொடங்கி, ஜூலை 2024 இல் நிறைவடைந்தது.
குதுப் ஷாஹி கல்லறை வளாகம் 500 ஆண்டுகள் பழமையான பெரியக் கல்லறைகள், இத்காக்கள், கல்லறைகள், இறுதி சடங்குகள் மேற்கொள்ளும் மசூதிகள், ஒரு ஹம்மாம் (குளிக்கும் இடம்) மற்றும் பாவோலிஸ் (படிக்கட்டுகளுடன் கூடிய கிணறு) ஆகியவற்றின் தொகுப்பாகும்.
ஏழு மன்னர்களில், ஆறு பேரின் கல்லறைகள் இக்கல்லறை வளாகத்தில் உள்ளன.
இது 1518 ஆம் ஆண்டு மற்றும் 1687 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், 169 ஆண்டுகள் கோல்கொண்டா மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட பிராந்தியத்தின் கலை மற்றும் கட்டிடக்கலையின் உச்சத்தைச் சித்தரிக்கிறது.
கோல்கொண்டா கோட்டை உள்ளிட்ட குதுப் ஷாஹி நினைவுச் சின்னங்களும், கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா, பிடார் மற்றும் பீஜப்பூரில் உள்ள இதே போன்ற நினைவுச் சின்னங்களும் 2014 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்துள்ளன.