ஜெர்மனியின் கோல்னில் நடைபெற்ற குத்துச் சண்டை உலகக் கோப்பையின் 54 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூரைச் சேர்ந்த மீனா குமாரி மைசனாம் என்பவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர் இறுதிப் போட்டியில் தாய்லாந்தைச் சேர்ந்த மச்சாய் புன்யானுட் என்பவரைத் தோற்கடித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்ற புகழ்மிக்க ஸ்ட்ரான்ஜா நினைவுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம் வென்ற ஒரே இரண்டாவது இந்தியப் பெண் குத்துச் சண்டை வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.