TNPSC Thervupettagam

குனோ தேசிய பூங்காவில் உள்ள சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை

March 14 , 2024 127 days 159 0
  • இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உள்ள காமினி எனப்படும் தென்னாப்பிரிக்க சிவிங்கிப் புலி சமீபத்தில் ஐந்து குட்டிகளை ஈன்றதையடுத்து, இந்தியாவில் பிறந்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
  • குட்டிகள் உட்பட மொத்த சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உள்ளது.
  • இந்தியாவின் வளங்காப்புத் திட்டத்திற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
  • இந்தியாவில் தென்னாப்பிரிக்க சிவிங்கிப் புலிகளின் முதல் குட்டிகள் இதுவாகும்.
  • 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியன்று எட்டு நமீபிய சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்