தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவில் காணப்படும் உபயோகமற்ற அல்லது தொலைந்து போன வலை மற்றும் கடல் குப்பைகள் போன்ற பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மாநில வனத்துறையானது HCL அறக்கட்டளையுடன் (HCLF) கைகோர்த்துள்ளது.
இதில் உபயோகமில்லாத தூக்கி எறியப்பட்ட அல்லது தொலைந்து போன மீன்பிடிச் சாதனங்கள் ‘Ghost nets’ எனப்படுகின்றன.
இது உலகெங்கிலும் அமைந்துள்ள கடலோர மற்றும் கடல் வாழ்விடங்களுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
ஒரு மாபெரும் அளவில் குடிமக்கள் ஈடுபாடு சார்ந்த நடவடிக்கைக்கான மூன்றாண்டு காலச் செயல் திட்டம் மற்றும் ‘குப்பைகள் இல்லாத மன்னார் வளைகுடா’ வெகுஜன விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நடத்தப்படும்.