TNPSC Thervupettagam

குப்பைகள் இல்லாத மன்னார் வளைகுடா

December 31 , 2022 569 days 496 0
  • தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா கடல் தேசியப் பூங்காவில் காணப்படும் உபயோகமற்ற அல்லது தொலைந்து போன வலை மற்றும் கடல் குப்பைகள் போன்ற பிரச்சனையைத் தீர்ப்பதற்காக மாநில வனத்துறையானது HCL அறக்கட்டளையுடன் (HCLF) கைகோர்த்துள்ளது.
  • இதில் உபயோகமில்லாத தூக்கி எறியப்பட்ட அல்லது தொலைந்து போன மீன்பிடிச் சாதனங்கள் ‘Ghost nets’ எனப்படுகின்றன.
  • இது உலகெங்கிலும் அமைந்துள்ள கடலோர மற்றும் கடல் வாழ்விடங்களுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
  • ஒரு மாபெரும் அளவில் குடிமக்கள் ஈடுபாடு சார்ந்த நடவடிக்கைக்கான மூன்றாண்டு காலச் செயல் திட்டம் மற்றும் ‘குப்பைகள் இல்லாத மன்னார் வளைகுடா’ வெகுஜன விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நடத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்