TNPSC Thervupettagam

கும்பமேளா மற்றும் நேப்பிள் பிட்சா

December 8 , 2017 2415 days 771 0
  • யுனெஸ்கோ அமைப்பின் கீழ் உள்ள தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரியங்களின் பாதுகாப்பிற்கான அரசுகளுக்கு இடையேயான குழு தென்கொரியாவின் ஜேஜீ நகரில் நடைபெற்ற தன்னுடைய 12-வது கூட்டத்தில் மனித குலத்தின் தொட்டுணரமுடியாத கலாச்சார பாரம்பரிய பிரதிநிதித்துவ பட்டியலில் (Representative List of Intangible Cultural Heritage of Humanity) “கும்பமேளாவை”    சேர்த்துள்ளது.
  • ஹரித்துவார், அலகாபாத், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கும்பமேளாவை “பூமியில் உலகிலேயே அதிகமான  புனித யாத்திரிகர்கள் பங்கு பெறும் அமைதியான கூடுகை” என யுனெஸ்கோ   அங்கீகரித்துள்ளது.
  • யோகா மற்றும் நவ்ரோஸ் ஆகிய இரண்டினிற்கு அடுத்து, இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து கும்பமேளா மூன்றாவதாக   இப்பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • தெற்கு இத்தாலியின் நேப்பிள் பகுதியில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்து கொண்டு வரப்பட்டிருக்கும் பிட்சா சுழற்றுதல் தயாரிப்பு கலையும் யுனெஸ்கோவின் தொட்டுணர முடியாத கலாச்சார பாரம்பரிய பிரதிநிதித்துவ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்