TNPSC Thervupettagam

குயிகியாவோ விண்கலம்

May 24 , 2018 2377 days 688 0
  • நிலவினுடைய கருமைப் பகுதியினை ஆய்வு செய்யும் சீனாவின் திட்டமிடப்பட்ட சங்கே-4 நிலவு வான்சுற்று ஆய்வுக் கலத்திற்கும், பூமிக்கும் தொடர் இணைப்பினை ஏற்படுத்துவதற்காக குயிகியாவோ (Magpie Bridge) எனப் பெயரிடப்பட்ட தொடர் வரிசை செயற்கைக்கோளை சீனா ஏவியுள்ளது.
  • சீனாவின் நிலவு ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக லாங் மார்ச் 4C எனும் இராக்கெட்டின் மூலம் ஜீசங் விண்வெளி இராக்கெட் ஏவுதள மையத்திலிருந்து இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

  • நிலவின் சேய்மைப் பக்கத்தினை தாண்டி 64,000 கிலோமீட்டர் தூரத்தில் புவியீர்ப்பு விசை ரீதியாக நிலையான இடமான புவிக்கும் நிலவுக்கும் இடையேயான லெக்ராஞ்சியன் இரண்டாவது புள்ளியில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது இது ஒளி வட்டச் சுற்றுப்பாதை ஆகும்.
  • இதுவே இந்த நிலையத்தில் செயல்படுகின்ற உலகின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளாகும்.
  • சீனாவின் நிலவுப் பெண் கடவுளான சங்கேவின் பெயர் கொண்டு சீன நிலவுத் திட்டத்திற்கு சங்கே திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் செயல் நடப்பில் உள்ள ரோபோட்டிக் நிலவுத் திட்டமாகும்.
  • சீனாவின் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றது.

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்