உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது சர்வதேச அளவில் கவலை கொள்ள வைக்கும் நோயாக இருந்த (PHEIC) குரங்கம்மை நோய்க்கான பொது சுகாதார அவசரநிலை என்ற அந்தஸ்தினை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
இந்த நோயானது எதிர்பாராத வகையில் சர்வதேச அளவில் பரவியதை அடுத்து 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப் பட்டது.
2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்த நோய் உலகளவில் பரவத் தொடங்கியதையடுத்து, 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவான பெருமளவில் உறுதிப் படுத்தப்பட்ட பல்வேறு பாதிப்புகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பானது வெளியிடப்பட்டது.