உலக சுகாதார அமைப்பானது அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கான மருந்துகளின் பட்டியலில், குரங்கம்மையினைக் கண்டறியும் முதல் ஆய்வகச் சோதனை முறையினைப் பட்டியலிட்டுள்ளது.
அலினிட்டி m MPXV மதிப்பீடு என்பது நிகழ்நேர PCR சோதனையாகும் என்பதோடு இது மனிதத் தோல் புண் மாதிரிகளில் இருந்து குரங்கம்மை வைரஸ் (வகை I/II) டிஎன்ஏவை கண்டறிய உதவுகிறது.
தற்போது, இந்திய நாடு முழுவதிலும் சுமார் 35 ஆய்வகங்களில், சந்தேகத்திற்கிடமான குரங்கம்மை பாதிப்புகளைப் பரிசோதிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கப் பிராந்தியம் முழுவதும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.