TNPSC Thervupettagam

குரங்கு அம்மை – உலகளாவிய அவசரநிலை

July 27 , 2022 727 days 347 0
  • உலக சுகாதார நிறுவனமானது, உலகளவில் குரங்கு அம்மை பரவி வருவதை 'சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய பொது சுகாதார அவசரநிலை' என அறிவித்து உள்ளது.
  • இது 'பெருந்தொற்று' என்ற நிலையை விட ஒரு படி கீழே உள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதியன்று, அந்த அமைப்பு கோவிட்-19 தொற்று நோயை சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய ஒரு பொது சுகாதார அவசர நிலையாக வகைப்படுத்தியது.
  • அந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று, உலக சுகாதார அமைப்பு அதனை 'பெருந் தொற்று' என்ற நிலைக்கு உயர்த்தியது.
  • சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய ஒரு பொது சுகாதார அவசரநிலை பிரகடனம் "தற்காலிகமானது" என்பதோடு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை இது மதிப்பாய்வு செய்யப்படும்.
  • முந்தைய ஆண்டுகளில், எபோலா (2014), ஜிகா வைரஸ் (2016), H1N1 (2009), போலியோ வைரஸ் (2014) மற்றும் கோவிட்-19 ஆகியவை சர்வதேச அளவில் சிக்கல் உண்டாக்கக் கூடிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்