TNPSC Thervupettagam

குரங்குக் காய்ச்சல் - கேரளா

March 27 , 2019 1944 days 818 0
  • குரங்குக் காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசானூர் காட்டு நோய்க்கு வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் குறைந்த பட்சமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
  • 1957 ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த நோய் கண்டறியப்பட்டது. இந்நோயானது கியாசானூர் காட்டு நோய் வைரசினால் (KFDV - Kyasanur Forest disease virus) ஏற்படுகிறது.
  • KFDV ஆனது மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிளாவிவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
  • கியாசானூர் காட்டு நோய் என்பது மிகவும் தொற்றும் தன்மையுள்ள ஹிமோகிராஹிக் வைரஸ் காய்ச்சலாகும். மேலும் இது அதிக இறப்பு விகிதங்களுடன் தொடர்புடையது.
  • உண்ணி கடித்தல் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகள், சமீபத்தில் நோய் பாதிப்புக்கு உள்ளான விலங்குகள், சமீபத்தில் இறந்த குரங்குகள் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் பரவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்