உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது குரங்குக்காய்ச்சலை "சர்வதேச அளவில் கவலை கொள்ள வைக்கும் வகையிலான பொது சுகாதார அவசரநிலை" (PHEIC) ஆக அறிவித்துள்ளது.
குரங்குக்காய்ச்சல் ஆனது ஆர்த்தோபாக்ஸ் வைரஸால் ஏற்படுகிறது.
1970 ஆம் ஆண்டில் மனிதர்களில் முதன்முதலில் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டது என்றாலும் அது மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப் பட்டது.
இந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் 11 நாடுகளில் ஆய்வகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட சுமார் 2,100க்கும் மேற்பட்ட நோய்ப் பாதிப்புகள் மற்றும் 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ஆப்பிரிக்காவிற்கு வெளியே வேறு நாடுகளில் குரங்குக்காய்ச்சல் கிளேட் 1 திரிபின் பாதிப்பைப் பதிவு செய்த முதல் நாடு சுவீடன் என்றும் உலக சுகாதார அமைப்பானது தெரிவித்துள்ளது.