கௌகாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குரல் நாண் அதிர்வு சமிக்ஞைகளிலிருந்து நேரடியாக மனித பேச்சு/குரல் சமிக்ஞைகளை உருவாக்குவதற்கான "LOQU" என்ற ஒரு புதிய முறையினை உருவாக்கி உள்ளனர்.
இந்த நுட்பத்தில் தொண்டையின் மேல் வைக்கப்பட்டுள்ள பல்வேறு உணர்விகளைப் பயன்படுத்தி, உட்செலுத்துதல் நடைமுறைகள் இல்லாமல் குரல்வளை மடிப்பு (நாண்) இயக்கத்தை ஆய்வு செய்ய முடியும்.
பேசும் போது, உள்ளார்ந்த குரல்வளை தசை இயக்கம் காரணமாக குரல் மடிப்புகள் அதிர்வுறும்.
உணர்வியக்கமின்மை (அப்ராக்ஸியா) பாதிப்பினால் ஏற்படும் பிறழ்வு போன்ற சில சந்தர்ப்பங்களில், சிலருக்கு ஒலி உற்பத்தி இல்லாமல் சாதாரண குரல் மடிப்பு அதிர்வு நிகழலாம்.
மேற்கண்ட குறைபாட்டிற்கு, குரல் நாண் அதிர்வுகளிலிருந்துப் பேச்சு சமிக்ஞைகளை மீளுருவாக்குவதற்கு LOQU என்பதினைப் பயன்படுத்த முடியும்.