இந்திய மாநிலங்களின் முதன்மை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை மறுசீரமைப்பதற்குமான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து பரிந்துரைப்பதற்காக என்று ஓர் உயர் மட்டக் குழுவை அமைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் இக்குழுவிற்குத் தலைமை தாங்க உள்ளார்.
இந்தக் குழுவில் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் பொருளாதார நிபுணர் M. நாகநாதன் ஆகியோரும் அடங்குவர்.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் 1969 ஆம் ஆண்டு மத்திய-மாநில அரசு உறவுகளை ஆய்வு செய்வதற்காக இராஜமன்னார் குழுவை அமைத்தார்.
இராஜமன்னார் குழுவானது 1971 ஆம் ஆண்டில் அதன் விரிவான ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு 1983 ஆம் ஆண்டில் சர்க்காரியா ஆணையத்தையும் பின்னர் 2007 ஆம் ஆண்டில் புஞ்சி ஆணையத்தையும் அமைத்து மத்திய-மாநில அரச உறவுகள் குறித்து மேலும் ஆய்வு செய்தது.