குரு கோபிந்த் சிங்கின் பிறந்த தினத்தை இந்தியா கொண்டாடியது.
இவர் சீக்கியர்களின் 10வது குருவாகக் கருதப்படுகின்றார்.
இவர் 1666 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதியன்று பிறந்தார்.
குரு கோபிந்த் சிங் 1699 ஆம் ஆண்டில் கால்சா என்ற சீக்கிய படைவீரர் சமூகத்தை நிறுவினார்.
இவர் சீக்கிய மதத்தில் ஐந்து “கே”களை அறிமுகப்படுத்தினார்.
இது "பஞ்ச் காக்கர்" என்று அழைக்கப்படுகின்றது. அவை வெட்டப்படாத முடி (கேஷ்), இரும்பு வளையல் (காரா), ஒரு மர சீப்பு (கன்கா), 100% பருத்தி உள்ளாடை (கச்சேரா) மற்றும் இரும்புக் குத்துவாள் (கிர்பன்) ஆகியனவாகும்.
சீக்கிய மதத்தின் புனித உரையான தாசம் கிரந்த் ஆனது குரு கோபிந்த் சிங்கிற்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.