TNPSC Thervupettagam

குரு தேக் பகதூரின் 400வது பிரகாஷ் பூரப்

May 4 , 2021 1179 days 554 0
  • 2021 ஆம் ஆண்டு மே 01 அன்று இந்தியா குரு தேக் பகதூரின் 400வது பிரகாஷ் பூரப் தினத்தினைக் கொண்டாடியது.
  • இவர் 9வது சீக்கிய மத குரு ஆவார்.
  • இவர் 1621 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அமிர்தசரசில் பிறந்தார்.
  • இவர் குரு ஹர்கோபிந்த் சிங்கின் இளைய மகனாவார்.
  • இவர் 115 பாடல்களை எழுதியுள்ளார், அவை குரு கிரந்த் சாகிப்பில் சேர்க்கப் பட்டு உள்ளன.
  • ஔரங்கசீப்பின் ஆணையின்படி குருதேக் பகதூருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
  • குரு தேக் பகதூருக்கு குருத்துவாரா சிஷ் கஞ்ச் சாகிப் (Gurudwara Sis Ganj Sahib) எனும் இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
  • குருதேக் பகதூரின் உடல் குருத்துவாரா ரக்கப் கஞ்ச் சாகிப் (Gurudwara Rakab Ganj Sahib) எனும் இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
  • இவரது தியாகமானது குரு தேக் பகதூரின் சாஹீதி திவஸ்’ (Shaheedi Divas of Guru Tegh Bahadur) என நினைவு கூறப்படுகிறது.
  • இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 24 ஆம் தேதி அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்