TNPSC Thervupettagam

குரோசிடுரா நோர்கொண்டமைகா

May 6 , 2021 1173 days 561 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனத்தின் (Zoological Survey of India – ZSI) குழு ஒன்று அந்தமானின் நார்கொண்டம் தீவில் ஒரு புதிய பூச்சி உண்ணும் பாலூட்டி இனத்தைக் கண்டறிந்துள்ளது.
  • இந்த விலங்கிற்கு குரோசிடுரா நோர் கொண்டமைகா (Crocidura Norcondamica) எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த விலங்கினமானது கிட்டத்தட்ட வீட்டு எலியின் அளவில் உள்ளது.
  • பூச்சிகளை உட்கொள்ளும் இந்த விலங்கினமானது காட்டுப் பகுதிகளில் வாழ்கிறது.
  • இவை அடர்ந்த நார்கொண்டம் காடுகளில் உள்ள பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன.
  • இவை ஷ்ரூஸ் குடும்பத்தைச் சார்ந்தவை.
  • ஷ்ரூஸ் குடும்பத்தைச் சார்ந்த விலங்குகள் கொறிந்துண்ணிகள் (Rodents) அல்ல.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்