குறிப்பிட்ட நபர் மட்டும் கேட்கக் கூடிய சூழல் என்பது சுற்றியுள்ளச் சத்தத்தினால் இடையூறு செய்யப் படாத சிறிய ஒலிசூழ் பகுதிகளாகும்.
அவை ஒருவர் கூட்டத்தில் இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே கேட்கக் கூடிய ஒலிகளை வழங்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய தொழில் நுட்பங்களால் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு அதிர்வெண்களைக் கொண்ட இரண்டு உயர் அதிர்வெண் அலைகளைப் பயன்படுத்தி இதை உருவாக்கியுள்ளனர்.
அவை இந்த வடிவத்தில் தனித்தனியாக இருக்கும் போது நம்மால் கேட்கமுடியாது.
ஆனால் அவற்றில் குறுக்கீடு ஏற்படும் போது, பலபடித்தான தொடர்புகள் அந்த இடத்தில் அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே கேட்கக் கூடிய அளவில் ஓர் ஒலி அலையை உருவாக்குகின்றன.
ஒலி அலை கையாளுதலை அடிப்படையாகக் கொண்ட இந்த தொழில்நுட்பம் ஆனது, தேவையுள்ள நபர்கள் மட்டுமே இந்த ஒலியைக் கேட்க முடியும் என்பதை நன்கு உறுதி செய்கிறது.