TNPSC Thervupettagam

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தினம் – ஜூன் 27

June 28 , 2022 790 days 327 0
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என்பது பொதுவாக 250 பணியாளர்களுக்கு மேல் பணியமர்த்தாத, ஆனால் உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு வல்ல நிறுவனங்களாகும்.
  • இத்தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் 2017 ஆம் ஆண்டில் அதன் 74வது முழு அளவிலானக் கூட்டத்தில் அனுசரிக்கப்பட்டது.
  • சர்வதேச சிறு வணிகத்திற்கானச் சபையின் (ICSB) 2016 ஆம் ஆண்டு உலக மாநாட்டில், உலக மேம்பாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கை அங்கீகரிக்க வேண்டிய அவசரத் தேவை குறித்தப் பிரகடனம் நிறைவேற்றப் பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, முறையான மற்றும் முறைசாரா குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மொத்த வேலைவாய்ப்பில் 70 சதவிகிதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதமும் பங்காற்றுகின்றன.
  • 2022 ஆம் ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு, ‘குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் - மீள்நிலைக் கூடிய மீட்சி’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்