இது கடல்களில் காணப்படும் தாவர குற்றுயிரிகள் மற்றும் பாசிகளால் இயற்கையாக உருவாக்கப் படுகிறது.
அதன் முக்கியக் கூறுகள் குளோரின், புரோமின் அல்லது அயோடின் ஆகியவை ஆகும்.
இவை ஆறு மாதங்களுக்கும் குறைவான கால அளவே நீடிக்க கூடியவை ஆகும்.
சமீபத்திய ஆய்வின்படி கடல்கள் குறுகியக் கால அளவே நிலைக்கும் ஹாலஜன்களை (உப்பீனிகள்) வெளியிடுவதன் மூலம் புவியின் குளிரூட்டலில் 8-10% பங்களிக்கின்றது.
இருப்பினும் பல மனித நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் அவற்றின் உமிழ்வினைப் பெருக்கியுள்ளது.
கடல்களில் உருவாக்கப்படும் இந்தக் குறுகிய கால அளவே நிலைக்கும் உப்பீனிகள் ஓசோன் அடர்த்தியைக் குறைப்பதன் மூலம் வெப்பமயமாதலைக் குறைக்கிறது என்று அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.