ஜப்பானின் ஆய்வாளர்கள் முதன்முறையாக குறுங்கோளில் செயற்கையான முறையில் வெற்றிகரமாக ஒரு பள்ளத்தை உருவாக்கியுள்ளனர்.
இது சூரியக் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் குறித்த சில தடயங்களை அளிக்கும்.
ஹயபுசா 2 என்ற விண்கலத்திலிருந்து பேஸ்பால் அளவுடைய வெடிபொருளானது வெளியிடப்பட்டு குறுங்கோளின் மீது கணிசமான அளவுக்கு ஒரு பள்ளத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த மோதல் மேலாண்மை செய்யப்பட்டது.
ஹயபுசா 2 விண்கலமானது பூமியில் இருந்து 340 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள யுகு என்ற குறுங்கோளின் மீது ஒரு ஏவுகணையை வெடிக்கச் செய்தது.
இது உயிர்களின் தொடக்கம் மற்றும் சூரியக் குடும்ப பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது 2020 ஆம் ஆண்டில் மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.